கோலாலம்பூர், செப்டம்பர்.10-
கத்தாரின் டோஹா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்செயல் கத்தாரின் இறையாண்மைக்கு எதிரான ஓர் ஆக்கிரமிப்பு என்றும், சர்வதேசச் சட்டத்தைக் கடுமையாக மீறுகின்ற ஒரு செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், பொறுப்பற்ற முறையில், அந்நாட்டின் தலைநகரின் மையப் பகுதியில் தாக்குதல் நடத்தியிருப்பது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றது என்றும் அன்வார் கவலைத் தெரிவித்துள்ளார்.








