Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கிளந்தானின் வெள்ள நிலைமை மோசமடைகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிளந்தானின் வெள்ள நிலைமை மோசமடைகிறது

நவ. 28-

கிழக்குகரை மாநிலங்களில் குறிப்பாக கிளந்தானில் வெள்ள நிலைமை மோசமடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தங்கள் வீடுகளிலிந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மாலை 7 மணி நிலவரப்படி 50 ஆயிரம் பேரை தாண்டியுள்ளது.

இன்று காலையில் 37 ஆயிரம் பேர், நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்த நிலையில், இந்த எண்ணிக்கை மாலையில் 50 ஆயிரத்து 068 பேராக உயர்ந்துள்ளது என்று மாநில வெள்ளப் பேரிடர் நிர்வாக மையம் அறிவித்துள்ளது.

பாசீர்மாஸ், தானா மேரா, ஜெலி, பாச்சோக், தும்பாட், மாச்சாங், கோலகிராய், பாசீர் பூத்தே, கோத்தாபாரு மற்றும் குவா மூசாங் ஆகிய பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →