அலோர் ஸ்டார், செப்டம்பர்.12-
கெடா, தாமான் நோனா, குவார் செம்பெடாக்கில் நேற்று இரவு 9 மணியளவில், உடலில் பல இடங்களில் கத்திக் குத்துக் காயங்களுடன் ஆடவர் ஒருவரும், பெண் ஒருவரும் சடலமாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
28 வயது மதிக்கத்தக்க அப்பெண், வீடு ஒன்றின் முன் நின்றிருந்த புரோட்டோன் வீரா காரின் உள்ளேயும், 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் அவ்வீட்டின் அருகே சாலையோரத்திலும் கிடந்ததாக யான் ஓசிபிடி கண்காணிப்பாளர் முகமட் ஹமிஸி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் அந்த ஆடவர் யான் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அப்பெண் சுங்கை பட்டாணியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளதாக முகமட் ஹமிஸி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவ்விருவரின் மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








