அலோர் காஜா, செப்டம்பர்.26-
பள்ளி மாணவி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக மெக்கானிக் ஒருவர், அலோர் காஜா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
25 வயது முகமட் அஷ்ராஃப் ரம்லி என்ற அந்த நபர், நீதிபதி அய்ஸா கைரிடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் முதல் தேதி இரவு 11.30 மணியளவில் அலோர் காஜா, கோல சுங்கை பாரு, கம்போங் ஆயர் மோலேக்கில் அந்த நபர் 15 வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த நபர், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.








