Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் நேர்மைகலாச்சாரம் கேள்விக்குறியாகிறது
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் நேர்மைகலாச்சாரம் கேள்விக்குறியாகிறது

Share:

கோலாலம்பூர், ஜூலை 15-

மலேசியாவின் நேர்மை கலாச்சாரம் தீவிரமாக அழிக்கப்பட்டு வருகிறது. மலேசிய நேர்மை கலாச்சாரத்தின் தன்மை தற்போது கேள்விக்குறியாகிறது என்று அனைத்துலக வாணிப, தொழில்துறையின் முன்னாள் அமைச்சர் தந் ஸ்ரீ ராபிட்ச் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தலைமைக் கணக்காய்வாளர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட பணக் கசிவுகள், தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடுகள் ஆகியவை அதற்குச் சான்றாகும் என்று ரபிடா அஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய சமூகத்தில் நேர்மை இல்லாத சூழ்நிலை எவ்வளவு பரவலாகக் காணப்படுகிறது என்பதை தலைமைக் கணக்காய்வாளரின் அந்த அறிக்கையில் தெரிந்து கொள்வது மனதை வேதனையடையச் செய்வதாக ரபிடா கூறுகிறார்.

அதிகார துஷ்பிரயோகத்தின் நச்சுத்தன்மையால், எந்தத் துறையும் தீண்டப்படாமல் இருப்பதாகத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோடிக்கணக்கான வெள்ளிப் பணத்தை உள்ளடக்கிய ஒரு நிர்வாகத்திலிருந்து இத்தகைய மடைமாற்ற சம்பவங்களை அண்மைய கணக்குத் தணிக்கை பணக் கசிவுகள், திருட்டுகள் முதலிவை நிரூபிக்கின்றன என்று ரபிடா தெரிவித்துள்ளார்.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்