Jul 16, 2026
Thisaigal NewsYouTube
தும்பாட்டில் 15 வயது சிறுமி பலமாகத் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
தற்போதைய செய்திகள்

தும்பாட்டில் 15 வயது சிறுமி பலமாகத் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

Share:

கிளந்தான் மாநிலம், தும்பாட், கம்பங் மெசிரா பகுதியில், நேற்று நடந்த கொள்ளைச் சம்பவம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவர் பலத்த காயமடைந்தார்.

காலை 7 மணியளவில் நடைப்பயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியேறிய அச்சிறுமி, நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், குடும்பத்தினர் காலை 10 மணி முதல் அவரைத் தேடத் தொடங்கியதாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் கைரி ஷாஃபி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதர் ஒன்றில் முகம் மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்களுடன் அச்சிறுமி கண்டறியப்பட்டுள்ளார்.

மேலும், அவர் முகம் மற்றும் தலையில், தடி ஒன்றால் பலமாகத் தாக்கப்பட்டு, அவரது கைப்பேசி கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது ராஜா பெர்மைசூரி ஜைனப் II மருத்துவமனையில் அச்சிறுமி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News