Jul 10, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவுக்கு நீண்டகால பெட்ரோல், எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புதல்
தற்போதைய செய்திகள்

மலேசியாவுக்கு நீண்டகால பெட்ரோல், எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புதல்

Share:

மலேசியாவிற்கு நீண்டகால அடிப்படையில் பெட்ரோல், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ரஷியாவில் நடைபெற்ற ரஷ்யா–ஆசியான் நினைவுவேந்தல் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, தனது இரு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தின் நிறைவில் மலேசிய செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார், இந்த ஒப்பந்தம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ளதைப் போல ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே புதுப்பிக்கப்படும் ஒப்பந்தங்களைச் சார்ந்திருக்காமல், நீண்டகால எரிசக்தி வழங்கல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் மலேசிய மக்களுக்கு நாட்டின் எரிசக்தி விநியோகம் குறித்து நீண்டகால உறுதி கிடைக்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தங்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தான் நாடு திரும்பியவுடன், இந்த செயல்முறையை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அன்வார், ஒப்பந்த வரைவு ஏற்கனவே தயாராக உள்ளதோடு, அடிப்படைக் கொள்கைகளிலும் இரு தரப்பும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்