Jul 16, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல்களில் 30 விழுக்காடு பெண்களை களமிறக்கும் சட்டத்திற்கு அமனா ஆதரவு
தற்போதைய செய்திகள்

தேர்தல்களில் 30 விழுக்காடு பெண்களை களமிறக்கும் சட்டத்திற்கு அமனா ஆதரவு

Share:

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்தபட்சம் 30 விழுக்காடு பெண்கள் இடம்பெற வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வருவதற்கான முன்மொழிவுக்கு அமனா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் முகமது ஃபைஸ் ஃபட்சில், நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய தலைமைக் குழுக் கூட்டத்தில் இதற்கு ஆதரவு வழங்க ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வரவிருக்கும் ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ள கட்சி முழுமையாக தயாராக இருப்பதாகவும் ஃபைஸ் ஃபட்சில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், அமனா மற்றும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், கட்சியின் அனைத்து நிலைகளிலுமுள்ள தேர்தல் இயந்திரங்களை முழுமையாகச் செயல்படுமாறு அமனா உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News