பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கும், தமக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை அந்தக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடீன் மறுத்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனலில் இரண்டு அணிகள் உருவாக்கியுள்ளதாக கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.
இந்த நாட்டில் பிரதமராக வருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடீனுக்கு தகுதி இருப்பதாக அண்மையல் பாஸ் கட்சி பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, பெர்சத்து கட்சியிலும், பெரிக்காத்தான் நேஷனலிலும் இரண்டு அணிகள் தோன்றியுள்ளன என்ற கூறப்படுகிறது.
எனினும் இந்த குற்றச்சாட்டை முன்னாள் உள்துறை அமைச்சரான ஹம்ஸா ஸைனுடீன் முற்றாக மறுத்துள்ளார். உண்மையிலேயே தம்மை முகைதீனுக்கு பிடிக்கவில்லை என்றால் பொதுச் செயலாளர் பதவில் இருந்து நீக்கி இருப்பார். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லையே என்று ஹம்ஸா ஸைனுடின் வினவியுள்ளார்.








