புத்ராஜெயா, ஜூன் 27-
நேற்று பெய்த கனத்த மழை மற்றும் புயலின் காரணமாக சிலாங்கூர், செபாங் மாவட்டத்தில் உள்ள ஒன்பது இடங்களில் 30 மரங்கள் சாலையில் விழுந்தன.
நேற்று மாலை 6 மணியளவில் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து, செப்பாங் மாநகர் மன்றத்தின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செப்பாங் மாநகர் மன்றத்தின் தலைவர் டத்தோ அப்துல் ஹமீத் ஹுசைன் தெரிவித்தார்.
சைபர்வெல்லி, சைபர்ஜெயா, பெகன் டெங்கில், கோட்டா வாரிசன், தமன் வாரிசன் இந்தா, பந்தர் பாரு சலாக் டிங்கி, தமான் கெமிலாங் உட்பட சேப்பாங் புத்ரா ஆகிய பகுதிகள் இதில் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்துல் ஹமீத் கூறினார்.
அதிகமான அளவில் தமன் கெமிலாங்கில் 20 மரங்களும் சைபர்ஜெயாவில் நான்கு மரங்களும் இதர பகுதிகளில் ஒரு மரம் மட்டுமே சாய்ந்ததாக அப்துல் ஹமீத் மேலும் தகவலளித்தார்.
இச்சம்பவத்தின் போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்கள் மீது மரங்கள் விழுந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அப்துல் ஹமீத் குறிப்பிட்டார்.








