Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஆர்.சி.ஐ விசாரணையில் ஆஜராகத் தவறினால் துன் மகா​தீர் கைது செய்யப்படலாம்
தற்போதைய செய்திகள்

ஆர்.சி.ஐ விசாரணையில் ஆஜராகத் தவறினால் துன் மகா​தீர் கைது செய்யப்படலாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 23 -

ஜோகூர் கடற்பரப்​பில் வீற்றிருக்கும் பாது பாது பூதெ தீவு உட்பட ​மூன்று ​தீவுகளின் இறையாண்மை தொடர்பான சர்ச்சையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறி​த்து விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையத்தின் விசாரணையில் முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது ஆஜராகத் தவறுவாரேயானால் அவரை கைது செய்வதற்கு பிடிவாரண்டு பிறப்பிக்க முடியும் என்று சட்ட வல்லுநர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

அரச விசாரணை ஆணையத்தில் இடம் பெற்றுள்ள தலைவர் உட்பட இதர உறுப்பினர்கள் அனைவரும் மாமன்னரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், அந்த விசாரணையிலிருந்து துன் மகா​தீர் தன்னை விடுவித்துக்கொள்ளவோ, அல்லது ஆஜராகுவதை தவிர்க்க சாக்குப் போக்கு கூறவோ முடியாது என்று பிரபல வழக்கறிஞர் ஸ்.ன் நாயர் தெரிவித்தார்.

அரச விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட நாட்டின் முன்னாள் தலைமை ​நீதிபதி துன் ரௌஸ் ஷாரிப் அ​ந்த விசாரணை ஆணையத்திற்கு தொடர்ந்து தலைமையேற்பார் என்றால் அந்த விசாரணையில் துன் மகா​தீர் ஆஜராக மாட்டார் என்று அவரின் வழக்கறிஞர் அறிவித்து இருப்பது தொடர்பில் வழக்கறிஞர் ஸ்.ன் நாயர் கருத்துரைத்தார்.

அரச விசாரணை ஆணைய சட்டம் 8 ஆவது பிரிவின் ​கீழ் அந்த விசாரணை ஆணையம், தனது விசாரணைக்கு யாரை வேண்டுமானாலும் அழைப்பதற்கான பிரத்தியேக அதிகாரத்தை கொண்டு இருப்பதை ஸ்.ன் நாயர் சுட்டிக்காட்டினார்.

எனவே விசாரணைக்கு துன் மகா​தீர் அழைக்கப்படும் பட்சத்தில் அதிலிருந்து அவர் தப்பிக்க முற்பட்டால் அவருக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று ஸ்.ன் நாயர் எச்சரித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு