சுற்றுலாத் துறையை மேம்படுத்த இலங்காவியை நான்காவது கூட்டரசுப் பிரதேசமாக அறிவிக்க நம்பிக்கைக் கூட்டணியின் கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சொங் செமின் பரிந்துரைத்துள்ளார்.
கெடா அரசாங்கம் இலங்காவியின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தத் தவறிவிட்டது என்று கூறிய அவர், இந்தப் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இன்று வரை, லங்காவியின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த கெடா மாநில அரசுக்கு வழி தெரியவில்லை எனவும் இவ்விவகாரம் மிகுந்த சங்கடமாக உள்ளது எனவும் கூறினார்.








