Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மனைவியை அடித்த கணவரை நீதிமன்றம் விடுவித்தது
தற்போதைய செய்திகள்

மனைவியை அடித்த கணவரை நீதிமன்றம் விடுவித்தது

Share:

கோலாலம்பூர், ஜூலை 18-

தனது மனைவியை மோப்புக்கட்டை மற்றும் Besbol மட்டையினால் அடித்து காயப்படுத்தியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த ஆடவர் ஒருவரை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யாமல், வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.

இந்திரஜித் சிங் என்ற 45 வயதுடைய அந்த ஆடவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் சில திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் முஹம்மது முஹைரி முகமது நோ, நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து தண்டனை அளிக்கப்படவிருந்த நிலையில் அந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோலாலம்பூர் ,ஜாலான் ஈபோ, தமன் ரெயின்போ, செந்தூல் என்ற முகவரியில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் தனது மனைவி சுக்விந்தர் கௌர் என்பவரை அடித்து காயத்தை விளைவித்தாக இந்திரஜித் சிங் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் இந்திரஜித் சிங் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு