Oct 27, 2026
Thisaigal NewsYouTube

அரசுக்கு 31.4 கோடி ரிங்கிட் நிலுவை: ஜெட்ரிக்ஸ், மைஇஜி மீது வழக்குத் தொடரப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசுக்கு 31.4 கோடி ரிங்கிட் நிலுவை: ஜெட்ரிக்ஸ், மைஇஜி மீது வழக்குத் தொடரப்படும்

சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவிற்கு செலுத்த வேண்டிய 31.4 கோடி ரிங்கிட் வருவாயைச் செலுத்தத் தவறிய ஜெட்ரிக்ஸ் ஏஐ மற்றும் மைஇஜி நிறுவனங்கள் மீது அரசாங்கம் வழக்குத் தொடரவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறுகையில், நிலுவைத் தொகையையும் அபராதத்தையும் உரிய காலத்துக்குள் செலுத்தாததால் சிவில் வழக்குகள் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆண்டு மே முதல் செப்டம்பர் வரை வசூலிக்கப்பட்ட அரசாங்க வருவாயை நிறுவனங்கள் செலுத்தத் தவறியுள்ளன. இது தொடர்பாக போலீசாரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் விசாரணை நடத்தி வருகின்றன.

மேலும், மூன்றாம் தரப்பு முகவர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, ஜேபிஜேயின் மைசிக்காப் இணையத் தளமும் மைஜேபிஜே செயலியும் மேம்படுத்தப்படும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →