Oct 17, 2026
Thisaigal NewsYouTube

பாலியல் சேட்டை, நீச்சல் பயிற்றுநர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலியல் சேட்டை, நீச்சல் பயிற்றுநர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், நவ. 13-


தன்னிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த ஐந்து வயது சிறுவனிடம் பாலியல் சேட்டைப் புரிந்ததாக நீச்சல் பயிற்றுநர் ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

எங் குவான் ஹோ என்ற அந்த 27 வயதுடைய நீச்சல் பயிற்றுநகர், கடந்த நவம்பர் 7 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் கோலாலம்பூர், செந்தூல், தாமான் ஸ்ரீ பிந்தாங்கில் உள்ள நீச்சல் பள்ளியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆ ண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறால் பாலியல் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நீச்சல் பயிற்றுநர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →