ஜாசின், அக்டோபர்.16-
வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றுப் பகுதிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மூதாட்டி ஒருவர், நேற்று முதல் காணவில்லை என்று புகார் செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
83 வயது மரியம் சமாட் என்ற மூதாட்டியே மலாக்கா, ஜாசின், கம்போங் தாசேக், சுங்கை ரம்பாயில் இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த மூதாட்டியைத் தேடும் பணியில் தீயணைப்பு, மீட்புப் படையினர், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.