செல்லுபடியாகும் அடையாள ஆவணங்கள் இல்லாத மூன்று " புகைப்படக் கலைஞர்கள்" மீது இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த மார்ச் 22-ஆம் தேதி பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள் அருகே சுற்றுப்பயணிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரில் இவர்களும் அடங்குவர். இவர்களிடம் இருந்த 'மைகார்டு' போலி என்பது தேசிய பதிவுத் துறையின் கைரேகை சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர். தற்போது இந்த மூவரும் சுங்கை பூலோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சசாலி ஆடாம் தெரிவித்தார்.








