கோலாலம்பூர், கெப்போங்கில் தனது சக நாட்டவரைக் கொலை செய்ததாக 53 வயதுடைய ஒரு இந்தியப் பிரஜையான தங்கராஜு
சுப்பையா என்பவர் மீது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த மார்ச் 17-ஆம் தேதி, கெப்போங் ஜாலான் லாங் கூனிங் பகுதியில் 'பழனி' என்பவரைக் கொலை செய்ததாக 53 வயதுடைய தங்கராஜு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்ட போது குற்றச்சாட்டின் தன்மையை புரிந்து கொள்ள முடிகிறது என்பதற்க அடையாளமாக தங்கராஜு தலையை அசைத்தார்.
இச்சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதால் இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. எனவே தங்கராஜுவிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தங்கராஜு கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








