மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்லும் மலேசியக் கப்பல்களுக்கு எந்தவிதமான சுங்கக் கட்டணமும் விதிக்கப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்ததாக அவர் கூறினார்.
மலேசியா ஒரு நட்பு நாடு என்பதால், ஈரானிய அரசாங்கம் மலேசியக் கப்பல்களுக்கு விலக்கு அளித்துள்ளதாக மலேசியாவிற்கான ஈரான் தூதுர் வாலியுல்லா முகமது நஸ்ராபாதி தகவல் அளித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு மோதலால் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் தற்போது பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதுமில்லை என்றும், நிலைமையை அரசு அணுக்கமாக கவனித்து வருவதாகவும் அந்தோணி லோட்க தெரிவித்தார்.








