பிரபல மூத்த நகைச்சுவை நடிகர் சத்தியாவின் உடல்நிலை தற்போது தேறி வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 10-ஆம் தேதி, தொற்று பரவுவதைத் தடுக்க அவரது இடது கால் முட்டிக்கு மேல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தற்போது வங்சா மாஜுவில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் 62 வயது சத்தியாவை, அவரது மனைவியும் பிள்ளைகளும் கவனித்து வருகின்றனர்.
வாரத்திற்கு மூன்று முறை அம்பாங் மருத்துவமனையில் காயங்களைச் சுத்தம் செய்யும் சிகிச்சையும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனையும் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
'பி மாய் பி மாய் டாங் தூ' தொடர் மூலம் புகழ்பெற்ற சத்தியா விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.








