Mar 31, 2026
Thisaigal NewsYouTube
ஏப்ரல் மாதத்திற்கான ‘புடி டீசல்’  உதவித்தொகை 300 ரிங்கிட்டாக  நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

ஏப்ரல் மாதத்திற்கான ‘புடி டீசல்’ உதவித்தொகை 300 ரிங்கிட்டாக நீட்டிப்பு

Share:

உலகளாவிய எரிபொருள் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், ஏப்ரல் மாதத்திற்கான 'புடி மடானி' டீசல் உதவித்தொகையை 300 ரிங்கிட்டாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வழக்கமான உதவித்தொகையுடன் 100 ரிங்கிட் கூடுதல் இடைக்கால உதவியும் சேர்த்து மொத்தம் 300 ரிங்கிட் வழங்கப்படவுள்ளது.

இந்த உதவித்தொகை ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் சுமார் 3 லட்சத்து 40 ஆயிரம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News