Jun 30, 2026
Thisaigal NewsYouTube
 மலேசியா வருகை 2026' பிரச்சாரம் 2027-ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியா வருகை 2026' பிரச்சாரம் 2027-ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு

Share:

மலேசியாவிற்கு வருகை தாருங்கள் 2026 பிரச்சாரம் அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட உள்ளதாகத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் த் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய சுற்றுலா மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோதல்களால் மேற்கு ஆசியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 விழுக்காடு முதல் 27 விழுக்காடு வரை குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும், எரிபொருள் விலை உயர்வால் விமானக் கட்டணங்கள் அதிகரித்துள்ளதும் சுற்றுலாத் துறையைப் பாதித்துள்ளது.

எனவே, மலேசியாவை ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான சுற்றுலாத் தலமாக உலகிற்கு மீண்டும் நிலைநிறுத்தவும், சந்தைப்படுத்தல் உத்திகளை வலுப்படுத்தவும் இக்காலநீட்டிப்பு அவசியமாகிறது என ஜாஹிட் தெரிவித்தார்.

Related News