Dec 2, 2025
Thisaigal NewsYouTube
18 வாகனங்கள் கடுமையாக சேதமுற்றன
தற்போதைய செய்திகள்

18 வாகனங்கள் கடுமையாக சேதமுற்றன

Share:

கோலாலம்பூர் மாநகரில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் பெய்த கனத்த மழையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்துள்ளன. இதனால் 18 வாகனங்கள் சேதமுற்றதாக அறிவிக்கப்பட்டது. இடியுடன் கூடிய இந்த கனத்த மழையில் அவசர உதவிக் கேட்டு, MERS 999 மையம் அதிகமான தொலைபேசி அழைப்புகளை பெற்றுள்ளது.

கோலாலம்பூர் மையப்பகுதியில் வீற்றிருக்கும் ஜாலான் கம்போங் அத்தாப், ஜாலான் சுல்டான் இஸ்மாயில், தாமான் புக்கிட் அங்காசா, பெஜாபாட் கெசேஹாத்தா கெப்போங், ஜாலான் ஆயர் ஜெர்னே மற்றும் ஃபிலேட் வங்சா மாஜூ ஆகிய பகுதிகளில் மரங்கள் சாய்ந்து வாகனங்கள் சேதமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் ​தீயணைப்பு, மீட்புப்படை துறையின் செயலாக்க மையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News