May 5, 2026
Thisaigal NewsYouTube
பிப்ரவரி 13 முதல் 16 வகை அத்தியாவசியப் பொருட்களுக்கு உச்சவரம்பு விலை
தற்போதைய செய்திகள்

பிப்ரவரி 13 முதல் 16 வகை அத்தியாவசியப் பொருட்களுக்கு உச்சவரம்பு விலை

Share:

மலாக்கா, பிப்ரவரி.10-

2026-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு 16 வகையான அத்தியாவசியப் பொருட்களுக்குப் பண்டிகைக் கால உச்சவரம்பு விலைத் திட்டத்தை உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அமல்படுத்தவுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி, வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை இந்த விலைக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்று தெரிவித்தார். இதில் வெள்ளை வவ்வால் மீன், வெள்ளை இறால், சீன வெள்ளைப் பூண்டு, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி மற்றும் சீன உருளைக்கிழங்கு உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் அடங்கும் என்றார்.

Related News