Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் 22 மாதங்களில் 2 புதிய தமிழ்ப்பள்ளிகள்: டத்தோ அ. சிவநேசன் தகவல்
தற்போதைய செய்திகள்

பேராவில் 22 மாதங்களில் 2 புதிய தமிழ்ப்பள்ளிகள்: டத்தோ அ. சிவநேசன் தகவல்

Share:

பேரா மாநிலத்தில் கோப்பெங் மற்றும் பங்கோர் ஆகிய இடங்களில் அமையவுள்ள புதிய தமிழ்ப்பள்ளிகள் 22 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று கோப்பெங்கில் உள்ள R.T.C. . மண்டபத்தில் நடைபெற்ற பேரா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர கழகத்தின் 32 ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்துப் பேசிய அவர், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றார். அதேவேளையில் அவர்கள் நல்கி வரும் ஒத்துழைப்பும் பாராட்டாத்தக்கது. அத்தகை ஆசிரியர் பெருந்தகைகள் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு சமூகம் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று டத்தோ சிவநேசன் கேட்டுக்கொண்டார்.

பேரா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் நடவடிக்கைகளுக்காக 40,000 ரிங்கிட் மானியத்தை டத்தோ சிவநேசன் அறிவித்தார்.

முன்னதாக, தலைமையாசிரியர் கழகத் தலைவர் ஜெயகுமார் சபாபதி, மாநில அரசின் ஆதரவுக்கு தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். தெரிவித்தார்.

தலைமையாசிரியர்கள் திரளாக கலந்து கொண்ட கலந்துரையாடலுடனான இந்த ஆண்டுக்கூட்டத்தில் பணி ஓய்வு பெற்ற 11 தலைமையாசிரியர்கள் சிறப்புச் செய்யப்பட்டனர்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்