புத்ராஜெயா, நவம்பர்.14-
நாட்டின் மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட், 42 ஆண்டு காலச் சேவைக்குப் பிறகு இன்று பணி ஓய்வு பெற்றார்.
பணி ஓய்வு நிகழ்வில் மிகவும் தன்னடக்கத்துடன் பேசிய ஹஸ்னா, தாம் சார்ந்துள்ள நீதித்துறை, படிக்கும் காலத்தில் தாம் விரும்பிடாதத் துறையாகும் என்றார்.
விளம்பரத் துறையில் படிக்கவே ஆசைப்பட்டதாகவும், தனது தாத்தாவின் வற்புறுத்தலுக்கு இணங்க மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.
பெரிய ஆர்வம் எதுவும் இல்லாத நிலையில், போகும் போக்கில் சட்டத் துறையைப் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும், ஆனால், நீதித்துறையில் மலாயா தலைமை நீதிபதி பதவியை வகிக்க முடியும் என்று தாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று ஹஸ்னா பூரிப்புடன் குறிப்பிட்டார்.








