பாலியல் தொல்லை தொடர்பில் சுங்கை சிப்புட் பிகேஆர் நாடாளுன்ற உறுப்பினர் எஸ். கேசவனுக்கு எதிராக அவரின் முன்னாள் அதிகாரி இந்திராணி இராமசாமி தொடுத்து வழக்கு மீதான மேல்முறையீட்டில் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி கமாலுடின் எம்டி சாயிட், இரு தரப்பினரின் வாதங்களை செவிமடுத்தப் பின்னர் தீர்ப்பின் தேதியை அறிவித்ததாக இந்திராணி சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ரூபன் மதிவாணன் தெரிவித்தார்.
தமது முன்னாள் அதிகாரியான சுங்கை சிப்புட் எம்.பி. கேசவன், தமக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து கேசவன் தமக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை அவதூறு தன்மையிலானதாகும் என்று கூறி இந்திராணி இவ்வழக்கை தொடுத்து இருந்தார்.
இந்த வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து இந்திராணி, அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.








