Oct 9, 2026
Thisaigal NewsYouTube

வட்டி முதலைகளின் கையாட்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வட்டி முதலைகளின் கையாட்கள் கைது

ஜார்ஜ்டவுன், ஜூலை.15-

கடந்த ஜுன் 24 ஆம் தேதி பினாங்கு, தாசேக் குளுகோரில் மூன்று வீடுகளுக்குத் தீயிட்டு, நாச வேலையில் ஈடுபட்டதாக நம்பப்படும் வட்டி முதலைகளின் கையாட்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

20 வயது மதிக்கத்தக்க அந்த கையாட்கள் கடந்த ஜுலை 3 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனைகளில் வர்த்தக குற்றத் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

கடந்த ஜுன் 30 ஆம் தேதி பினாங்கு, தஞ்சோங் தோக்கோங்கில் உள்ள ஒரு வீட்டைச் சேதப்படுத்தப்படுத்திய சம்பவத்திலும் இந்த இரு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →