ஷா ஆலாம், நவம்பர்.08-
சிலாங்கூரைச் சேர்ந்த மூத்த குடிமக்களும், மாற்றுத் திறனாளிகளும் இனி மாநில அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
‘ஆம்புலன்ஸ் கீத்தா சிலாங்கூர்’ என்ற பெயரில் பெட்டாலிங், கோல லங்காட் மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டங்களில் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரியால் துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் சிலாங்கூரைச் சேர்ந்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினர் பயனடையவுள்ளனர்.
மாதம் 5000 ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பத்தினர், இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாநில பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
St John Ambulance of Malaysia என்ற ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்துடன் இணைந்து, நவீன வசதிகள் கொண்ட மொத்தம் 48 இலவச ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








