Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அந்த விரிவுரையாளர் இடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

அந்த விரிவுரையாளர் இடை நீக்கம்

Share:

கோலாலம்பூர், டிச. 23-


தனது நிர்வாணப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பிவைத்து ஆபாச சேட்டைப் புரிந்ததாக கூறப்படும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த விரிவுரையாளருக்கு எதிராக கூறப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 2000 ஆம் ஆண்டு அரசு சார்பு நிறுவன சட்டத்தின் கீழ் அந்த நபருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த முன்னணி பல்கலைக்கழகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயர்கல்விக்கூட மாணவர்கள் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் கல்வி தொடரப்படுவதை உறுதி செய்யவும், கட்டொழுங்கு நிலைநிறுத்தப்படுவதற்கும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related News