ஆசிரியர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்துள்ளார். ஆசிரியர்களின் அலவன்ஸ் தொகையை உயர்த்துவது, அரசாங்கத்தின் முக்கிய கவனமாக இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று மலாக்கா, ஆயர் குரோவில் மலாக்கா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ஆசிரியர் தின கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார். ஆசிரியர்களுக்கான கூடுதல் அனுகூலத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சிறிது கால அவகாசத்தை வழங்குமாறு ஆசிரியர் பெருந்தகைகளை அன்வார் கேட்டுக்கொண்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


