Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கணவன் மனைவி விடுவிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கணவன் மனைவி விடுவிக்கப்பட்டனர்

Share:

நான்கு வயது ஆண் குழந்தைக்கு காயம் ஏற்படும் அளவிற்கு கவனக்குறைவாக செயல்பட்ட ஓர் இந்திய தம்பதியரை ஜோகூர்பாரு, செஷன்ஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் வழக்கிலிருநது இன்று விடுதலை செய்துள்ளது.

23 வயதுடைய எஸ். நாகேந்திரன் மற்றும் 23 வயதுடைய ஏ. சங்கீதா ஆகியோருக்கு எதிராக இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருந்தனர். எனினும் பிராசிகியூஷன் தரப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தத் தம்பதியர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் ஜோகூர், தாமான் ஸ்கூடாய் பாரு, ஜாலான் அமான், ஸ்கூடய் விலா ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் அந்த குழந்தைக்கு காயம் ஏற்படும் அளவிற்கு அலட்சிமாக நடந்து கொண்டதாக அத்தம்பதியர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

Related News