Jul 30, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் இராணுவ வீரருக்கு 4 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

முன்னாள் இராணுவ வீரருக்கு 4 ஆண்டுகள் சிறை

Share:

ஈப்போ , ஜூலை 22-

பேராக், கிந்தா- வில் வீட்டின் வரவேற்பறையில் உறங்கிக் கொண்டிருந்த தமது நண்பரின் 12 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பணி ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவருக்கு ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறையும், ஒரு பிரம்படித் தண்டனையும் விதித்தது.

42 வயதுடைய அந்த முன்னாள் வீரர், கடந்த மார்ச் 28-ஆம் தேதி அதிகாலை 3 மணி வாக்கில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த நபருககு எதிராக கொண்டு வரப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி ஹில்மியா யூசோஃப் மேற்கண்ட தீர்ப்பினை வழங்கினார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு