கோலத் திரங்கானு, ஜூலை.12-
இம்மாதம் முற்பகுதியில் பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டையொட்டி பிரேசில் நாட்டிற்குத் தாம் மேற்கொண்ட பயணமானது, சுற்றி வருவதற்கான பயணம் அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.
உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்பைக் கொள்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இது அமைந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணமும், நாட்டின் பொருளாதாரத்திற்கு வருமானத்தை ஈட்டத் தக்க பயணமாக அமைந்ததே தவிர சுற்றி வருவதற்கான பயணமாக அமைந்தது இல்லை என்று பிரதமர் விளக்கினார்.
இன்று கோலத் திரங்கானுவில் திரெங்கானு மாநிலத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான மக்கள் மடானி திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.








