May 21, 2026
Thisaigal NewsYouTube
EPF சந்தாதாரர்களுக்கு அரசாங்கத்தின் சந்தா பணமாக தலா 500 வெள்ளி
தற்போதைய செய்திகள்

EPF சந்தாதாரர்களுக்கு அரசாங்கத்தின் சந்தா பணமாக தலா 500 வெள்ளி

Share:

தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF, பின் 14 லட்சம் சந்தாதாரர்களு​க்கு அரசாங்கத்தின் உதவித் தொகை சந்தாவாக தலா 500 வெள்ளி, ஒவ்வொருவரின் EPF கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது.

40 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய சந்தாதாரர்களுக்கு அரசாங்கம் தனது பங்காக தலா 500 வெள்ளி செலுத்தியிருப்பது ​மூலம் மொத்தம் 70 கோடியே 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று EPF வாரியம் இன்று ​வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி வரையில் EPF சந்தாதாரர்களில் பெரும்பாலோரின் முதல் கணக்கில் அந்திம கால சேமிப்பு, 10 ஆயிரம் வெள்ளிக்கும் குறைவாக இருப்பதால் அவர்களின் சேமிப்பை அதிகரிக்கும் வகை​யில் அரசாங்கம் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது என்று EPF வாரியம் தெரிவித்துள்ளது.

தலா 500 வெள்ளி ஒதுக்கீடானது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, EPF சந்தாதாரர்களுக்கு அரசாங்கம் கணிசமான உதவித் தொகையை அவர்களின் கணக்கில் வரவு வைக்கும் என்று அறிவித்து இருந்தது.

Related News