Apr 13, 2026
Thisaigal NewsYouTube
லெபனான் நிறுவனத்தின் நகைகளை நான் அணியவே இல்லை - நீதிமன்றத்தில் ரோஸ்மா வாக்குமூலம்
தற்போதைய செய்திகள்

லெபனான் நிறுவனத்தின் நகைகளை நான் அணியவே இல்லை - நீதிமன்றத்தில் ரோஸ்மா வாக்குமூலம்

Share:

2018 பொதுத்தேர்தலுக்கு முன்பு லெபனான் நிறுவனம் அனுப்பிய 44 ஆபரணங்களில் எதனையுமே தான் அணிந்ததில்லை என ரோஸ்மா மன்சூர் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமது கணவர் நஜிப் ரசாக்கிற்காக பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் தாம் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் , அந்த நகைகள் அனைத்தும் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

புருணை சுல்தான், சுல்தான் ஹாசனல் போல்கியாவின் மனைவிகளில் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த நிறுவன உரிமையாளரைத் திருப்திப்படுத்தவே நகைகளைத் தன்னிடம் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும்போது அந்த நகைகளும் 'பெவிலியன் ரெசிடென்ஸிற்கு' மாற்றப்பட்டன.

தாங்கள் அங்கு இல்லாதபோது நடந்த போலீஸ் சோதனையில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பின்னர் அவற்றைச் சோதித்தபோது பல நகைகள் "காணாமல்" போயிருந்ததாகவும் ரோஸ்மா தெரிவித்தார்.

மொத்தம் 1.46 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 43 நகைகளைத் திரும்பக் கோரி குளோபல் ராயல்டி நிறுவனம் தொடுத்துள்ள வழக்கில் சாட்சியம் அளிக்கையில் ரோஸ்மா இதனை தெரிவித்துள்ளார்.

Related News

சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய கைதி: சிசிடிவி காட்சிகள் கசிவு குறித்து விசாரணை

சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய கைதி: சிசிடிவி காட்சிகள் கசிவு குறித்து விசாரணை

ஜார்ஜ் டவுன் தீ விபத்து: மூத்த வழக்கறிஞர் ஜி. சன் மார்கன் காலமானார் – அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறையினர் இரங்கல்

ஜார்ஜ் டவுன் தீ விபத்து: மூத்த வழக்கறிஞர் ஜி. சன் மார்கன் காலமானார் – அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறையினர் இரங்கல்

பேருந்து ஓட்டுவதா? காதல் லீலை செய்வதா? மடியில் பெண்ணுடன் 'ஸ்டீயரிங்' பிடித்த ஓட்டுநர் பணிநீக்கம்

பேருந்து ஓட்டுவதா? காதல் லீலை செய்வதா? மடியில் பெண்ணுடன் 'ஸ்டீயரிங்' பிடித்த ஓட்டுநர் பணிநீக்கம்

ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் புத்தாண்டு செய்தி

ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் புத்தாண்டு செய்தி

"காதல் வலை விரித்து மோசடி" 4 வெளிநாட்டினர் கைது"

"காதல் வலை விரித்து மோசடி" 4 வெளிநாட்டினர் கைது"

பினாங்கில் ஊசி மருந்து குழாய் பொம்மைகளுக்குத் தடை

பினாங்கில் ஊசி மருந்து குழாய் பொம்மைகளுக்குத் தடை