Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் ஊசி மருந்து குழாய் பொம்மைகளுக்குத் தடை
தற்போதைய செய்திகள்

பினாங்கில் ஊசி மருந்து குழாய் பொம்மைகளுக்குத் தடை

Share:

பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக 'சிரிஞ்ச்' வகை பொம்மைகளை விற்பனை செய்ய பினாங்கில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹ்ங் மூய் லியே. தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஊசி மருந்து குழாய் பொம்மைகள் இரவுச் சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் இவை 5 வெள்ளிக்கு விற்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன.

சிரிஞ்ச்கள் மருத்துவ உபகரணப் பிரிவில் வருவதால், அவற்றை பொம்மைகளாகப் பயன்படுத்துவது விதிகளுக்குப் புறம்பானது என்பதையும் ஹ்ங் மூய் லியே விளக்கினார்.

இவற்றின் ஊசிகள் கூர்மையாக இல்லாவிட்டாலும், குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இப்பொம்மைகள் முறையாக அகற்றப்படாவிட்டால் துப்புரவுப் பணியாளர்களுக்குக் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. விதிகளை மீறும் வணிகர்கள் மீது பினாங்கு மற்றும் செபராங் பிறை மாநகர் மன்றங்கள் கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதுடன் தினசரி சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

பினாங்கில் ஊசி மருந்து குழாய் பொம்மைகளுக்குத் தடை | Thisaigal News