Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இடைநிலைப்பள்ளி முதல்வர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இடைநிலைப்பள்ளி முதல்வர் மீது குற்றச்சாட்டு

டிச. 19-

16 வயது மாணவியை பாலியல் சேட்டைப் புரிந்ததாக திரெங்கானு, மாராங் வட்டாரத்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியின் முதல்வர் மாராங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

59 வயது முகமட் தஜுடின் மொக்தார் என்ற அந்த இடைநிலைப்பள்ளி முதல்வர் கடந்த ஜுலை 2 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் கிளர்ச்சியை தூண்டும் வகையில் 16 வயது மாணவியிடம் ஆபாசப்படங்களை காட்டி, சேட்டைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த பள்ளி முதல்வர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →