மதம் மாற்றப்பட்ட தமது மூன்று பிள்ளைகள், முஸ்லிம் அல்லாத தனது முன்னாள் மனைவியிடம் ஒப்படைப்பதில் சட்ட ரீதியாக பாடுபட்டு, தமது மூன்று பிள்ளைகளை தம்மிடமிருந்து பிரிப்பதில் வெற்றிக் கண்ட வழக்கறிஞர் ஒருவரை, பாஸ் கட்சி மாநாட்டில் சிறப்பு பிரமுகராக அழைத்து இருப்பதை கண்டு அந்த மூன்று பிள்ளைகளின் தந்தை முகமட் நாகேஸ்வரன் முனியாண்டி இன்று அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
தமக்கு ஆதரவாக இருக்க வேண்டிய பாஸ் கட்சி, கடந்த வாரம் நடைபெற்ற மாநாட்டில் தனது வைரியின் வழக்கறிஞருக்கு சிறப்பு அழைப்பு விடுத்து, அவருக்கு உரிய மரியாதை செலுத்தியிருப்பது, தம்மை குழப்பத்தில் ஆழ்த்துவதாக உள்ளது முகமட் நாகேவரன் குறிப்பிட்டுள்ளார்.
தமது முன்னாள் மனைவி லோ சியூ ஹோங்கின் வழக்கறிஞர் ஷாம்செர் சிங் தின் டிற்கு உரிய மரியாதையை பாஸ் கட்சி அளித்து இருப்பது, உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று முகமட் நாகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.








