சிலாங்கூர், செலாயாங், ஜாலான் சுங்ஙை துவா - உலுயாம் சாலையில் இன்று காலை 6.30 மணியளவில் குதிரை ஒன்று, Ford Ranger வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டது. 54 வயது நபர் செலுத்திய அந்த வாகனம், அந்தாரா காப்பியிலிருந்து ஶ்ரீ கோம்பாக்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென்று சாலையை கடந்ததாக கூறப்படும் அந்த குதிரையை மோதித் தள்ளியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அரிஃபின் முஹமாட் தெரிவித்தார்.
அந்த காட்டுப்பாதையில் குதிரை எங்கிருந்து வந்தது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேவேளையில் அந்த குதிரையின் உரிமையாளர் யாரும் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆராயப்ப்டடு வருவதாக அவர் மேலும் கூறினார். இந்த விபத்து 1950 ஆம் ஆண்டு போக்குவரத்து வழிமுறைச் சட்டத்தின் பத்தாவது விதியின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக நோர் அரிஃபின் முஹமாட் குறிப்பிட்டார்.








