கோலாலம்பூர், ஜனவரி.09-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி, மலாக்கா மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான UTeM – மின் கௌரவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டான் ஸ்ரீ அஸாம் பாக்கியின் நீண்டகால பொதுப்பணி அனுபவம் மற்றும் ஊழல் தடுப்புத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தின் மூலம், பல்கலைக்கழக மாணவர்களிடையே நேர்மை, ஊழல் எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் சிறந்த நிர்வாகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் ஆலோசனைகளையும் உரைகளையும் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








