Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சிறுமியின் ஆபாசப் படங்களை பரப்பிய முகநூல் குழு மூடப்பட்டு விட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிறுமியின் ஆபாசப் படங்களை பரப்பிய முகநூல் குழு மூடப்பட்டு விட்டது

ஜோகூர் பாரு, ஜூன்.15-

சிறுமி ஒருவரின் ஆபாசப் படங்களைப் பரப்பியதாகக் கூறப்படும் 'Grup Budak-Budak Sekolah Rendah' என்ற முகநூல் குழு மூடப்பட்டு விட்டதாகத் தகவல் தொடர்புத் துறைத் துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார். மலேசிய தகவல் தொடர்பு - பல்லூடக ஆணையம் இந்த முகநூல் கணக்கை மூட மேத்தா நிறுவனத்துடன் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், தகவல் தொடர்பு - பல்லூடக ஆணையம், காவல்துறை ஆகியவற்றோடு பிற சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், தொடக்க, இடைநிலைப் பள்ளிகளுடன் உயர்கல்வி நிலையங்களை இலக்காகக் கொண்ட இணையப் பாதுகாப்பு பிரச்சாரத்தையும் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →