Aug 6, 2026
Thisaigal NewsYouTube
லைசென்ஸ் பெறுவது அவசியமாகும்
தற்போதைய செய்திகள்

லைசென்ஸ் பெறுவது அவசியமாகும்

Share:

கோலாலம்பூர், டிச. 26-


டெலிகிராம் மற்றும் டென்செண்ட் போன்ற வீசாட் சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் மலேசியாவில் லைசென்ஸ் பெறவேண்டிய அவசியத்திற்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைமயான எம்.சி.எம்.சி. அறிவித்துள்ளது.

இணைய குருந்தகவல் சேவையை வழங்கி வரும் இந்த இரு நிறுவனங்களும் மலேசியாவில் செயல்படவதற்கு லைசென்ஸ் கொண்டிருக்க வேண்டும். இதன் அமலாக்கம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக எம்.சி.எம்.சி. இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லைசென்ஸ் பெறுவதற்கான விண்ணப்பம் இந்த டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது

Related News