Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஒரு வீட்டில் தங்கியிருந்த இருவருக்கு இடையே சண்டை: ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒரு வீட்டில் தங்கியிருந்த இருவருக்கு இடையே சண்டை: ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்

சுங்கை பூலோ, ஜூன்.26-

ஒரே வீட்டில் தங்கியிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 11.26 மணியளவில், சுங்கை பூலோ, கம்போங் குபு காஜாவில் நிகழ்ந்தது.

இதில் 33 வயதுடைய நபர், நெஞ்சுப் பகுதியில் கடுமையான வெட்டுக் காயங்களுடன் வீட்டின் அறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஹாஃபிஸ் நோர் தெரிவித்தார்.

இக்கொலை தொடர்பில் அந்த ஆடவருடன் தங்கியிருந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கிளந்தானைச் சேர்ந்த அந்த நபர், மூன்று தினங்களுக்கு முன்புதான் அந்த வீட்டிற்கு வந்ததாக நம்பப்படுகிறது என்று ஹாஃபிஸ் நோர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →