Nov 6, 2025
Thisaigal NewsYouTube
இன்ஸ்பெக்டர் ஷிலா விசாரணை செய்யப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

இன்ஸ்பெக்டர் ஷிலா விசாரணை செய்யப்படுகிறார்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.06-

கடந்த செவ்வாய்க்கிழமை லைசென்ஸின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய ஒரு பாகிஸ்தான் ஆடவரைத் தடுத்து நிறுத்திய போலீஸ்காரர்களின் நடவடிக்கை குறித்து சர்ச்சை செய்ததாகக் கூறப்படும் இன்ஸ்பெக்டர் ஷீலா குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

போலீஸ்காரர்களின் நடவடிக்கை குறித்து ஷீலா சர்ச்சை செய்யும் காட்சியைக் கொண்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது தொடர்பில் மாநகர் மன்ற போலீஸ் தலைவர் கருத்துரைத்தார்.

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ள ஓர் உணவகத்தில் முன்புறம் இரவு 9.30 மணிக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் போது துணிக்கடையில் வேலை செய்யும் 34 வயது பாகிஸ்தான் ஆடவர், போலீஸ்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அப்போது அவ்விடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஷீலா, அந்த அந்நிய நாட்டவரை போலீஸ்காரர்கள் மிரட்டுகின்றனர் என்றும் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களுக்கு சட்டத்தைப் பற்றி தெரியவில்லை என்றும் அந்த காட்சியைத் தனது கைப்பேசியில் பதிவு செய்து கொண்டே போலீஸ்காரர்களை ஏளனப்படுத்தியதாகவும், இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் புகார் அளித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News