Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சுற்றுலா பேருந்து, டிரெய்லர் லோரியில் மோதியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுற்றுலா பேருந்து, டிரெய்லர் லோரியில் மோதியது

கோப்பெங், நவ.9-


சுற்றுலா பேருந்து ஒன்று டிரெய்லர் லோரியுடன் மோதியதில் நால்வர் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று காலையில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 295.4 ஆவது கிலோ மீட்டரில் கோப்பெங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.

41 பயணிகளுடன் அந்த சுற்றுலா பேருந்து மலாக்காவிலிருந்து கெடாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் உதவி இயக்குநர் சபாரோட்ஷி நோர் அகமட் தெரிவித்தார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த சுற்றுலா பேருந்து, டிரெய்லர் லோரியின் பின்புறம் மோதியதில் இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை. ஆனால், மோதலினால், பேருந்து அதிர்ந்ததில் நான்கு பயணிகள் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →