டாமன்சாரா டாமாய் பகுதியில் நேற்று பிற்பகல் கூர்மையான ஆயுதத்துடன் வந்த மர்ம நபர் ஒருவர் நகைக்கடையில் கொள்ளையடித்துள்ளார்.
இச்சம்பவத்தில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பிற்பகல் 1.19 மணிக்கு போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்டக் போலீஸ் தலைவர் ஷாம்சுடின் மாமாட் தெரிவித்துள்ளார்.
கொள்ளை மற்றும் ஆயுதம் பயன்படுத்தி கொள்ளையடித்தல் ஆகிய குற்றங்களுக்குத் தண்டனைச் சட்டத்தின் 392 மற்றும் 397 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








