மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி மற்றும் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ இட்ரூஸ் ஹரூன் ஆகியோரின் பணி ஒப்பந்தக்காலம் நீட்டிக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் தங்கள் கடமைகளை மனநிறைவு அளிக்கும் வகையில் ஆற்றி வருகின்றனர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
அஸாம் பாக்கியும், இட்ருஸ் ஹரூணும் தங்கள் பணிகளைச் சிறப்பாக செய்வதற்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.
அஸாம் பாக்கியும், இட்ருஸ் ஹரூணும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீனால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார். அவர்கள் மீது முதலில் பிரச்னைகள் எழுப்பட்டாலும், நாட்டிற்கு தாம் தலைமையேற்ற போது அவர்களின் பணியைக் கண்டறியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தங்கள் கடமைகளை திருப்திகரமாக செய்கின்றனர் என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் இதனை தெரிவித்தார்.
தவிர அஸாம் பாக்கி அச்சப்படாமலும், பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கிறார். அதற்கு நல்ல உதாரணம், அமைச்சர் அலுவலகத்திலேயே ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியுள்ளது என்று அன்வார் விளக்கினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


