Jan 26, 2026
Thisaigal NewsYouTube
நில ஆக்கிரமிப்பு உள்ளது, ஆனால் 'சட்டவிரோதக் கோயில்' என முத்திரை குத்த வேண்டாம்
தற்போதைய செய்திகள்

நில ஆக்கிரமிப்பு உள்ளது, ஆனால் 'சட்டவிரோதக் கோயில்' என முத்திரை குத்த வேண்டாம்

Share:

ஷா ஆலாம், ஜனவரி.26-

சிலாங்கூர் மாநிலத்தில் கோயில்கள் சம்பந்தப்பட்ட நில ஆக்கிரமிப்பு வழக்குகள் இருப்பதை மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் பப்பாராயுடு வீரமன் இன்று ஒப்புக் கொண்டுள்ளார்.

இருப்பினும், அத்தகைய கட்டுமானங்களை தன்னிச்சையாக 'சட்டவிரோதம்' அல்லது ஹாராம் என்று முத்திரை குத்தக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் உள்ள ஒரு கட்டிடம் 'சட்டவிரோதமானது' என்பதை ஊராட்சி மன்ற அதிகாரிகளும் நில அலுவலகமும் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று பாப்பாராய்டு கூறினார்.

அந்தக் கோயில்கள் சட்டவிரோதமானவை என்று நாம் முத்திரை குத்த முடியாது. ஏனெனில் சில கோயில்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இருந்து வருகின்றன. அத்தகைய பழமையான கோயில்களை சட்டவிரோதம் என்று அழைப்பது முறையல்ல என்று அவர் விளக்கினார்.

அதே சமயம், சில குறிப்பிட்ட நலன்களுக்காகத் திட்டமிட்டு உருவாக்கப்படும் ஆக்கிரமிப்புகளைத் தாம் ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார். உதாரணமாக, பழைய இரும்புச் சாமான்களைச் சேமிப்பதற்காக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, அங்கேயே ஒரு வழிபாட்டுத் தலத்தையும் கட்டுவதை ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் பின்னர் நடவடிக்கை எடுப்பது கடினமாகிவிடும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Related News