Oct 2, 2026
Thisaigal NewsYouTube

Operasi Pintu Putra வேட்டை: புத்ராஜெயாவில் வீடு புகுந்து கொள்ளையடித்த வெளிநாட்டவர் கும்பல் கைது!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
Operasi Pintu Putra வேட்டை: புத்ராஜெயாவில் வீடு புகுந்து கொள்ளையடித்த வெளிநாட்டவர் கும்பல் கைது!

புத்ராஜெயா, நவம்பர்.30-

புத்ராஜெயாவில் Presint 11இலும் 14இலும் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று வெளிநாட்டு ஆடவர்கள் Operasi Pintu Putra என்ற அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடர்கள் ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற போது காவற்படை அதிகாரிகளுடன் நடந்த போராட்டத்திற்குப் பிறகு இந்தக் கைதுகள் நிகழ்ந்தன. இதில் இருவர் சட்டப்பூர்வக் கடப்பிதழ்களை வைத்திருந்தனர் என புத்ராஜெயா காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் ஐய்டி ஷாம் முகமட் கூறினார்.

இந்த மூன்று பேரும் கடந்த மூன்று மாதங்களாகச் செயல்பட்டு, வீட்டில் ஆட்கள் இல்லாத போது இரவில் வீட்டின் பின் கதவுகளை உடைத்து, 20 ஆயிரம் ரிங்கிட் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரையிலான மதிப்புள்ள நகைகளையும் பணத்தையும் குறிவைத்துத் திருடி வந்துள்ளனர். இந்தக் கும்பல் கடந்த நவம்பர் 11 ஆம் தேதியன்று ஒரு 'டான் ஸ்ரீ'யின் வீட்டிலும் கொள்ளையடிக்க முயன்றது. ஆனால் அலாரம் ஒலித்ததால் அவர்கள் தப்பியோடி விட்டனர் என்றும் ஐய்டி ஷாம் முகமட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை